Quantcast
Channel: பசூர் பாபு
Viewing latest article 25
Browse Latest Browse All 39

கல்யாணம் கட்டிக்க போற தன் மகனுக்கு ஒவ்வொரு அம்மாவும் கட்டாயம் சொல்லவேண்டியது.

$
0
0
கல்யாணம் கட்டிக்க போற தன் மகனுக்கு ஒவ்வொரு அம்மாவும் கட்டாயம் சொல்லவேண்டியது. காலங்காலமா புருசன் வீடு போகப்போற பொண்ணே....ன்னுதான் பாட்டுப் பாடிக்கிட்டு இருக்கோம் நாம... ஆனா, பசங்க என்ன பண்ணனும்கறத கண்டுக்கறதே இல்ல...!! www.puradsifm.com 5 Marriage Lessons that Mothers Should Give to their Sons 1. எந்த சமயத்திலும் மனைவியை அம்மா கூட ஒப்பிடவே கூடாது....!! மகனே...மறந்து கூட என்னை உன் மனைவியோட ஒப்பிட்டுப் பார்க்காதே...உன் அம்மாவுக்கு குடும்ப வாழ்க்கையில், 20 ஆண்டு கால அனுபவம் இருக்கு. ஆனா உன் மனைவி உன்னை மாதிரி தான். இந்த வாழ்க்கைக்கு புதுசு. உன்னை நான் வளர்த்த மாதிரி தான். அவங்க அம்மாவும் அவளை பார்த்துப் பார்த்து வளர்த்து இங்க அனுப்பியிருக்காங்க. அவளுக்கு கொஞ்சம் ஆண்டுகள் தேவைப்படும். அதுக்கப்புறம், உன் குழந்தைக்கு அருமையான அம்மாவாக அவள் இருப்பாள். 2. மனைவி உனக்கு அம்மா இல்லை, தோழி..!! மகனே, உன் மனைவி உன்னுடன் வாழ்க்கைய பகிர்ந்துகொள்ள வந்துள்ள தோழி. அம்மா இல்லை. உன் அம்மாவுக்கு உன்னை கவனிக்கறது மட்டும் தான் வேலை. ஆனா உனக்கு, உன் மனைவிய கவனிக்கறது முக்கியம். நீங்க ரெண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் கவனிச்சு அன்பு செலுத்தறது மிக மிக முக்கியம்டா. 3. மதிக்கப்படவேண்டியவள் மனைவி...!! மகனே , உன் வாழ்க்கையின் ஏற்றத்தாழ்வுகள், நல்லது கெட்டது அனைத்திலும் உன் மனைவி உடனிருந்து பங்கு கொள்ளப்போகிறவள். அவளை மதிக்கவேண்டும். உன் ஒவ்வொரு முன்னேற்றப்படியிலும் அவள் பங்கு உள்ளது. அவள் கருத்துகளைக் கேட்டு, முன்னுரிமை கொடுத்து வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருடா... 4. புகுந்த வீடு வந்த மனைவியை இயல்பாக உணர வைக்க உதவி செய்யணும். பிறந்து , வளர்ந்து மகிழ்ந்திருந்த பிறந்த வீட்டை விட்டு, நம் பொருட்டு புகுந்த வீட்டுக்கு வந்திருக்கா உன் மனைவி... அவளை இயல்பா இருக்க வைக்க நீதான் உதவணும்.. சின்னச் சின்ன விஷயங்கள் கூட அவளுக்கு சங்கடத்தைத் தரலாம்.. அதை நீதான் கவனிச்சு அவள் பிறந்த வீட்டில் இருப்பதைப் போல உணர வைக்கணும்டா... 5. எப்பவும் மனைவிய காதலிக்கவேணும் காதலிக்க வயசு ஒரு விஷயமே இல்லடா.. எப்பவும் உன் மனைவியை..சந்தோஷமா வச்சுக்கோ.. சின்னச்சின்ன சர்ப்ரைஸிங்கான பரிசுகள், வெளிய அழைச்சுட்டுப் போறது, அவள் டிரஸ்ஸிங்கை சிலாகிச்சுப் பேசறது, சந்தோஷமா வாய்விட்டு சிரிக்கறது மாதிரியான விஷயங்கள் உங்க ரெண்டுபேரையும்...எப்பவும்இளமையா உணர வைக்கும்...!! ஐந்து பாய்ண்ட்டுகளையும் சேர்த்து ஒரே பாய்ண்ட்டா சொல்றேன்டா.....!! உங்க அப்பா என்னை எப்படி நடத்தறாரோ....? அது போல நீயும் உன் மனைவியை...கௌரவமா மதிச்சுக் குடும்பம் நடத்துடா மகனே..!! உனக்கும் மருமகளா வந்திருக்கும் மகளுக்கும் என் அன்பும் வாழ்த்துகளும்....!!!! உங்கள் கருத்துக்களும் தெரிவிக்கலாம்...!

Viewing latest article 25
Browse Latest Browse All 39

Latest Images

Trending Articles


சாலை விபத்துகளும், அவற்றைத் தடுப்பதற்கான சட்டத் தேவைகளும்..!


சித்தன் அருள் - 768 - தாமிரபரணி புஷ்கரம், அந்தநாள்>>இந்த வருடம் - கோடகநல்லூர்!


விருப்பங்கள் நிறைவேற காமாட்சி தேவி மந்திரம்


சென்ற வார பாக்யா ஜனவரி 20-26 இதழில் என் ஜோக்ஸ்!


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


என்னிடம் நிர்வாண புகைப்படத்தை கேட்ட சீரியல் குழு அதிகாரி: நடிகை திவ்யா!


சோழர் பாசன திட்டம் என்றால் என்ன? அன்புமணி வைத்த அதிரடி கோரிக்கை-பின்னணி...


வெண்முரசு- குருபூர்ணிமா சிறப்புச் சலுகை


தொ.மு.சியின் புதுமைப்பித்தன் -கிருஷ்ணன் சங்கரன்


தகழி சிவசங்கரப்பிள்ளையின் ஏணிப்படிகள்



Latest Images